உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் கட்சி பிரதிநிதிகளுக்கு விளக்கம் | செய்திகள் | Dinamalar
உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் கட்சி பிரதிநிதிகளுக்கு விளக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 செப்
2021
05:30

பாகூர் : எல்லைகள் சீரமைப்பில் குளறுபடிகளை சரி செய்யாமல், உள்ளாட்சி தேர்தலை நடத்துவது சரியா என அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பினர்.புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.



இதில், மூன்றாம் கட்டமாக புதுச்சேரியில் உள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்களுக்கான தேர்தல் அக்.,28ம் தேதி நடைபெற உள்ளது.இது தொடர்பாக, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து, தேர்தல் நடத்தும் அதிகாரி அன்பழகன் தலைமையில், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், பாகூர் தாசில்தார் சுரேஷ்ராஜ், தெற்கு எஸ்.பி., லோகேஷ்வரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரி அன்பழகன், தேர்தல் நடத்தை விதிமுறைகள், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட 107 வாக்குச்சாவடி விவரங்கள் வெளியிடப்பட்ட அரசிதழின் நகல், உள்ளாட்சி பதவி இட ஒதுக்கீடு நகல்களை கட்சியினரிடம் வழங்கினார்.அரசியல் கட்சியினர், 'பஞ்சாயத்து எல்லை சீரமைக்கப்பட்டதில் குளறுபடி, குழப்பம் நடந்துள்ளதை சுட்டிக் காட்டியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என குற்றம் சாட்டினர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X