காங்., கூட்டணி பிரசார ஊர்வலம் | செய்திகள் | Dinamalar
காங்., கூட்டணி பிரசார ஊர்வலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 செப்
2021
05:33

புதுச்சேரி : முழு அடைப்பு போராட் டத்தை வலியுறுத்தி காங்., கூட்டணி கட்சிகளின் பிரசார ஊர்வலம் நடந்தது.மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து காங்., கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.



இப்போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு, நேற்று பிரசார ஊர்வலம் நடந்தது. மாநில காங்., தலைவர் சுப்ரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., எதிர்க்கட்சித் தலைவர் சிவா, தி.மு.க., அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.காமராஜர் சதுக்கத்தில் துவங்கிய ஊர்வலம், நேரு வீதி, மிஷன் வீதி, காந்தி வீதி வழியாக சின்ன மணிக்கூண்டு அருகே நிறைவடைந்தது.கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில், முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்கப்பட்டது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X