சுரேந்திரா மருத்துவமனையில் முதுகு தண்டுவட ஆபரேஷன் | செய்திகள் | Dinamalar
சுரேந்திரா மருத்துவமனையில் முதுகு தண்டுவட ஆபரேஷன்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 செப்
2021
05:41

கடலுார் : கடலுார் சுரேந்திரா பல்நோக்கு மருத்துவமனையில், 60 வயது பெண்ணிற்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.



கடலுாரில் சுரேந்திரா பல்நோக்கு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, 60 வயது பெண், இரு கால்களும் செயலிழந்த நிலையில் அழைத்து வரப்பட்டார். அவருக்கு, முதுகெலும்புக்குள் கட்டி வளர்ந்து தண்டுவடத்தை அழுத்தி இருந்தது தெரியவந்தது.அதையடுத்து, மருத்துவமனை தலைமை டாக்டர் ராஜேந்திரன் வழிகாட்டுதலில் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மணிகண்டன், மயக்க மருந்தியல் நிபுணர் தயாநிதி ஆகியோர் நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்து தண்டுவட கட்டியை அகற்றினர். மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளித்து, ஆரோக்கியமான நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.



சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே செய்யும் இது போன்ற அறுவை சிகிச்சை தற்போது கடலுார் சுரேந்திரா பல்நோக்கு மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X