உரம் கலந்த தண்ணீர் குடித்த 17 தொழிலாளர்கள் 'அட்மிட்' | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
உரம் கலந்த தண்ணீர் குடித்த 17 தொழிலாளர்கள் 'அட்மிட்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 செப்
2021
05:42

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே உரம் கலந்த தண்ணீரைக் குடித்த 17 விவசாய கூலித் தொழிலாளர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பழையநன்னாவரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி, சக்கரவர்த்தி. விவசாயிகள். இவர்களது நிலத்தில் நேற்று, 20க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகள் வேர்க்கடலை அறுவடை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, பக்கத்து நிலத்தில் உள்ள அங்கமுத்து என்பவரின் நிலத்தில் சொட்டு நீர் பாசனத்திற்காக உரம் கலந்து தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.இதனை அறியாமல் வேர்க்கடலை அறுவடை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான சிவக்குமார் மனைவி சுந்தரி, 38; ஏழுமலை மனைவி சுகுணா, 30; அய்யனார் மனைவி ரம்யா, 20; உட்பட 17 பேர் உரம் கலந்த தண்ணீரைக் குடித்தனர்.

சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். உடன் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதற்கிடையே அந்த தண்ணீரைக் குடித்த அப்பகுதியில் மேய்ந்த 3 பசு மாடுகளும் மயங்கி விழுந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.திருநாவலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X