ஓசூர்;அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜன் நவுரா 29; இவரது மனைவி இந்திரா நவுரா 27; இருவரும் ஓசூர் சின்ன எலசகிரியில் வாடகை வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களது வீட்டின் எதிரே அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கிசான் 25, அஜய்தந்தி 25 ஆகியோர் வசித்தனர்.ராஜன் நவுராவிடம் இருந்து 1000 ரூபாய் கடனாக கிசான் வாங்கியிருந்தார். அதை திரும்ப கேட்டபோது கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை பணத்தை திரும்ப கேட்ட ராஜன் நவுரா ஆபாசமாக கிசானை பேசியதுடன் மிரட்டல் விடுத்துள்ளார்.கிசான் தன் நண்பர் அஜய்தந்தியுடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு ராஜன் நவுராவை கத்தியால் வெட்டி கொலை செய்தார். இந்திரா நவுரா புகார்படி சிப்காட் போலீசார் கிசான் அஜய்தந்தி ஆகியோரை நேற்று மாலை கைது செய்து விசாரிக்கின்றனர்.