தாளவாடி: தாளவாடி மலையில் தோட்டங்களில் பட்டப்பகலில் நடமாடும் சிறுத்தையால், விவசாயிகள் பீதி குறைந்தபாடில்லை. தாளவாடி மலையில், வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களான தொட்டகாஜனூர், சூசையபுரம், பீம்ராஜ்நகர் பகுதிகளில் செயல்படாத கல் குவாரிகள் உள்ளன. இவற்றில் பதுங்கியுள்ள சிறுத்தை, இரவில் விவசாய தோட்டங்களில் புகுந்து, ஆடு, மாடு உள்ளிட்ட கால் நடைகளை அடித்து கொல்வது தொடர்கதையாக உள்ளது. இதை பிடிக்க தாளவாடி வனத்துறையினர், தொட்டகாஜனூர் பகுதியில் கூண்டு வைத்துள்ளனர். ஆனால், சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. இந்நிலையில் தொட்டகாஜனூரில் ஒரு விவசாய தோட்டத்தில், பட்டப்பகலில் சிறுத்தை நடமாடுவதை விவசாயி ஒருவர் மொபைல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனால் தாளவாடி மலை கிராம மக்கள் பீதி தொடர்கிறது.