தாளவாடி: தாளவாடி போலீசார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நேற்று ரோந்தில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் அடிப்படையில், தொட்டகாஜனூரை சேர்ந்த சிவப்பா, 30, என்பவரிடம் விசாரித்தனர். தாளவாடி, ஓங்கன்புரம் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உண்டியலை திருடியதாகவும், தாளவாடியில் மொபட்டை திருடியதையும் ஒப்புக் கொண்டான். சிவப்பாவை கைது செய்த போலீசார், சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர். சிவப்பா மீது, 2012 முதல் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.