11 பேர் போட்டியின்றி தேர்வு: 24 பதவிக்கு 91 பேர் போட்டி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
13:53

சேலம்: சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சியில், 35 பதவிக்கு அக்., 9ல் தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக, 172 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் தகுதியற்ற, 8 மனுக்கள் தள்ளுபடியானது. 62 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இதனால், 11 பதவிக்கு தலா ஒருவர் மட்டுமே மனுதாக்கல் செய்ததால், அவர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். அவர்கள் போக, மீதி, 24 பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு, 91 பேர் போட்டியிடுகின்றனர். மாவட்ட ஊராட்சி, 10வது வார்டில், 11 பேர் களமிறங்குகின்றனர். அதன்படி, சண்முகம் - உதயசூரியன், எம்.ஆர்.முருகன் - இரட்டை இலை, ச.பழனிசாமி - கரும்பு விவசாயி, சிவலிங்கம் - முரசு, இருசப்பன் - பதக்கம், ஈஸ்வரி - கோட்டை, சீனிவாசன் - பேட்டரி விளக்கு, பழனிசாமி - கோப்பையும் தட்டும், மணிகண்டன் - பிரஷர் குக்கர், முருகன் - கேரம் போர்டு, ஜெயராமன் - சீதாப்பழம் ஆகிய சின்னங்களில் போட்டியிடுகின்றனர்.


அதேபோல், ஒன்றிய உறுப்பினர், 9வது வார்டில், 11 பேர் போட்டியிடுகின்றனர். அதன்படி, சுரேஷ்குமார் - உதயசூரியன், மாணிக்கம் - இரட்டை இலை, தமிழரசன் - கரும்பு விவசாயி, குமார் - அடையாள குறி, செல்வம் - கிடார்(இசைக்கருவி) தேவி - மகளிர் பை, மலர்விழி - தீப்பெட்டி, ஸ்ரீதர் - மேல் சாலை உருளை, ஸ்ரீதேவிகுமார் - குலையுடன் கூடிய தென்னை மரம், ஸ்ரீமதி - மேசை விளக்கு, ஸ்ரீராம் - தண்ணீர் குழாய் ஆகிய சின்னங்களில் போட்டியிடுகின்றனர். ஊராட்சி தலைவர், 10 பதவிகளுக்கு, 39 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர், 23 பதவிக்கு, 11 பேர் போட்டியின்றி தேர்வானது போக, 12 பதவிக்கு, 30 பேர் களத்தில் உள்ளனர். போட்டியின்றி தேர்வான ஊராட்சி உறுப்பினர் வார்டு விபரம்: பைத்தூர், 9வது வார்டு; நெடுங்குளம், 1; லக்கம்பட்டி, 7; பி.நல்லாகவுண்டம்பட்டி, 4; வெள்ளக்கல்பட்டி, 4; சி.கே.மலை தெற்கு நாடு, 9; ஒலக்கச்சின்னானூர், 3, மணிவிழுந்தான், 8, பாப்பம்பாடி, 6, செலவடை, 9, கீரபாப்பம்பாடி, 4 என, 11 ஊராட்சி வார்டுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X