சேலம்: சேலம், அம்மாபேட்டை, திரு.வி.க., பிரதான சாலையை சேர்ந்தவர் இந்திராணி, 65. இவர், வீட்டுக்கு முன், பலகார கடை வைத்துள்ளார். நேற்று காலை, 10:00 மணிக்கு பலகாரம் செய்து கொண்டிருந்த போது, சிலிண்டரில் இருந்து காஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. அதில், கடையின் மேற்கூரை எரிந்து சேதமாகி, மூதாட்டி காயமடைந்தார். செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து, சிலிண்டரை அப்புறப்படுத்தினர். முதன்மை தீயணைப்பு வீரர் மீனாட்சி கூறுகையில், ''வியாபாரத்துக்கு முறைகேடாக வீட்டு உபயோக சிலிண்டர் பயன்படுத்தியதோடு, தரமற்ற, சேதமான ரெகுலேட்டர் பயன்படுத்தியதே விபத்துக்கு காரணம்,'' என்றார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.