சேலம்: செவ்வாய்ப்பேட்டையில் குட்கா பதுக்கி விற்பதாக கிடைத்த தகவலால், இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் தலைமையில் போலீசார், நேற்று சோதனை நடத்தினர். அப்போது, சுப்ரமணி தெரு, அதன் சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் துர்க்சிங், 39, மோகன்குமார், 30, சுமேத்சிங், 21, சேட்டாராம், 20, அசோக்குமார், 22, நித்ரேஷ், 28, சோனாராம், 20, ஆகியோர், கையும், களவுமாக சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார், 60 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். சூரமங்கலம், தர்மன், 2வது தெருவில், வின் ஸ்டோர் மளிகை கடை, உழவர் சந்தை அருகே, சூர்யா ஸ்டோர்ஸ் ஆகியவற்றில் இருந்து, 100 பெரிய பாக்கெட் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளர்கள் அஸ்ரப் பாஷா, 54, சாகுல் ராம், 46, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.