மேட்டூர்: மேட்டூர், மால்கோ மட்டசாலையை சேர்ந்தவர் வெங்கடாசலம், 54. மேட்டூர் ஆர்.எஸ்.ல், பஞ்சர் கடை வைத்துள்ளார். இவர் நேற்று காலை, 6:00 மணிக்கு, ராமன் நகர் அடுத்த திப்பம்பட்டியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது குஞ்சாண்டியூரை சேர்ந்த அரவிந்த், 29, கத்தியை காட்டி மிரட்டி, 500 ரூபாயை பறித்துக்கொண்டார். வெங்கடாசலம் புகார்படி, கருமலைக்கூடல் போலீசார் அரவிந்தை தேடுகின்றனர்.