மர்ம நோய் தாக்கி மாடுகள் பலி | தர்மபுரி செய்திகள் | Dinamalar
மர்ம நோய் தாக்கி மாடுகள் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 செப்
2021
14:05

காரிமங்கலம்: காரிமங்கலம் சுற்றுவட்டாரத்தில் மர்ம நோய் தாக்கி, 10க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்ததால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரத்தில், விவசாயிகள் மாற்று தொழிலாக கால்நடை வளர்ப்பை மேற்கொண்டுள்ளனர். பசுமாடுகள் அதிகளவில் வளர்த்து பால் உற்பத்தி செய்து, அதன் மூலம் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில வாரங்களாக மர்ம நோய் தாக்கி கால்நடைகள் இறந்தது. குறிப்பாக அடிலம் பஞ்.,ல் இதுவரை, 10க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன. அங்குள்ள ஒரு விவசாயியின், மூன்று மாடுகள் ஒரே நேரத்தில் இறந்தன. இதேபோல் சென்னம்பட்டி சின்னாத்துப்பள்ளம், சப்பானிபட்டி மற்றும் திண்டல், நாகணம்பட்டி மொட்டலூர் சுற்று வட்டாரத்தில் விவசாயிகள் வளர்த்த பல மாடுகளை மர்ம நோய் தாக்கி உள்ளது. இதுகுறித்து விவசாயிகள், காரிமங்கலம் மற்றும் பெரியாம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவர்களிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, மாடுகள் இறப்பை தடுத்து நிறுத்த, கால்நடை வளர்ப்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X