தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், மல்லாபுரத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை, 38. இவர், இண்டூர் அடுத்த சோமனஹள்ளியிலுள்ள ஒரு சிக்கன்கடையில் பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை, 6:00 மணிக்கு, சோளப்பாடியை சேர்ந்த சுந்தரம், 30, என்பவர் சிக்கன் கடைக்கு வந்துள்ளார். மதுபோதையில் இருந்த அவர், தன்னிடம் பணம் இல்லாததால், அண்ணாதுரையிடம் கடனாக சிக்கன் கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சுந்தரம் ஆத்திரத்தில், கடையிலிருந்த கத்தியால், அண்ணாதுரையை குத்தியுள்ளார். படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இண்டூர் போலீசார் வழக்குப்பதிந்து, சுந்தரத்தை கைது செய்தனர்.