ஓசூர்: அசாம் மாநிலத்தில், போராட்டம் நடத்திய விவசாயிகளை சுட்டுக்கொன்ற அம்மாநில அரசை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில், ஓசூர் ராம் நகரில் நேற்று முன்தினம் மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, ஓசூர் டவுன் வி.ஏ.ஓ., முருகன் புகார்படி, டவுன் போலீசார், எஸ்.டி.பி.ஐ., கட்சியினர், 16 பேர் மீது வழக்குப்பதிந்தனர்.