கோவில் நிர்வாகத்தில் முறைகேடு: செயல் அலுவலர் 'சஸ்பெண்ட்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
14:24

நாமக்கல்: பொதுமக்கள் நிதியை, 'அறநிலையத்துறை நிதி' என கணக்கு காட்டி, பல லட்சம் முறைகேடு செய்ததாக, கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


நாமக்கல் மாவட்டம், கபிலர்மலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் உள்பட, 12 கோவில்களின் செயல் அலுவலராக கலைவாணி என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கபிலர்மலை கோவில் திருத்தேர், பொதுமக்கள் வசூல் செய்த பணத்தில் சீரமைக்கப்பட்டது. ஆனால், செயல் அலுவலர் கலைவாணி, இந்து சமய அறநிலையத்துறை நிதியை, திருத்தேருக்கு பயன்படுத்தி சீரமைத்ததாக கணக்கு காட்டி, பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. மேலும், அவரது கட்டுப்பாட்டில் இருந்த கோவில்களின் வரவு, செலவு கணக்குகளிலும் முறைகேடு செய்ததாகவும் இணை ஆணையர் அலுவலகத்துக்கு புகார் சென்றது. அதையடுத்து, அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், செயல் அலுவலர் கலைவாணி, ஒரு மாத விடுப்பில் சென்று விட்டார். அதிகாரிகள் நடத்திய விசாரணையில், முறைகேடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, செயல் அலுவலர் கலைவாணியை 'சஸ்பெண்ட்' செய்து ஈரோடு மண்டல அறநிலையத்துறை இணை இயக்குனர் மங்கையர்க்கரசி உத்தரவிட்டார்.


இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தமிழரசு கூறியதாவது: ப.வேலூர் தாலுகாவில் உள்ள கபிலர்மலை, பாண்டமங்கலம் உள்ளிட்ட, 12 கோவில்களின் செயல் அலுவலராக கலைவாணி பணியாற்றினார். அவர் மீது முறைகேடு புகார் நிரூபிக்கப்பட்டதையடுத்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். கோவில் வரவு, செலவு கணக்கில் முறைகேடு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், ஒரு மாத விடுப்பில் இருந்து வரும், கலைவாணி மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X