குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலையில் சி.ஐ.டி.யு., சார்பில் தெருமுனை விளக்க கூட்டம் நடந்தது. கிளை தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட உதவி செயலாளர் ராஜா முகமது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல் ஆகியோர் பேசினர். பா.ஜ., அரசை கண்டித்து அனைத்து கட்சிகள், விவசாய அமைப்புகள், தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக கடையடைப்பு, மறியல் போராட்டம் நாளை நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி விளக்க கூட்டம் நடந்தது.