மா.திறனாளிகள் சட்டம்: விளக்க கூட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
14:38

கரூர்: ''தனியார் நிறுவனங்களில், 5 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்கப்பட வேண்டும்,'' என, கலெக்டர் பிரபுசங்கர் பேசினார். தனியார் தொழிற்சாலை நிறுவனங்களுக்கு மாற்று திறனாளிகள் உரிமைச்சட்டம் மற்றும் உரிமை விதிகள் குறித்து விளக்கும் வகையிலான கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது: தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில், 5 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற அரசின் விதியினை அனைத்து தனியார் நிறுவனங்களும் முறையாக பின்பற்ற வேண்டும். அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வருவதற்கு உகந்த கட்டமைப்புகள் இருக்க வேண்டும். நுழைவு வாயிலில் சாய்வுதளங்கள் இருக்க வேண்டும். நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் வருகை தந்தால், அவர்களை உள்ளே அழைத்துச்செல்ல ஏதுவாக நகரும் நாற்காலிகள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பயன் படுத்த உகந்த வகையிலான கழிவறைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். விதிகளை முறையாகப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார். டி.ஆர்.ஓ.,லியாகத், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) பிரியதர்ஷினி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி பங்கேற்றனர்

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X