கரூர்: போதை மற்றும் மது ஒழிப்பு மறு வாழ்வு சீர்திருத்த விழிப்புணர்வு கூட்டம், வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. மது போதையால் உடலுக்கு ஏற்படும் தீமைகள், குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல், சமூகத்தில் ஏற்படும் மரியாதை குறைவு குறித்து, ஏ.டி.எஸ்.பி., ராதா கிருஷ்ணன் விளக்கமளித்து பேசினார். அப்போது, அரவக்குறிச்சி டி.எஸ்.பி., முத்தமிழ்செல்வன், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமா தேவி, எஸ்.ஐ., அப்துல்லா மற்றும் போலீசார் உடனிருந்தனர். தொடர்ந்து, வர்த்தக நிறுவனங்களில் கேமராக்கள் பொருத்துவது குறித்து, ஏ.டி.எஸ்.பி., ராதா கிருஷ்ணன் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.