4 வழிச்சாலைக்கு நிலம் வழங்கியோருக்கு இழப்பீடு தாமதம்; அதிகாரிகள் குளறுபடியால் விவசாயிகள் பரிதவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
19:00

ஈரோடு: நான்கு வழிச்சாலைக்காக நிலம் எடுக்கப்பட்டதில், நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்காமலும், வருவாய் துறையில் நில விபரம் வழங்காமலும் விவாயிகள் சிரமப்படுகின்றனர்.


ஈரோடு - பெருந்துறை - பவானி - கோபிக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கு, சேலம் டி.ஆர்.ஓ., (நிலம் எடுப்பு) கவிதா தலைமையிலான குழுவினர், நிலங்களை அளவீடு செய்து கையகப்படுத்தினர். இதில் பகுதி நிலத்துக்கு வங்கி கணக்கில் இழப்பீடு செலுத்தியதாக கூறி, கடந்த பிப்., மாதம் உத்தரவு நகல் வழங்கினர். ஆனால் இதுவரை இழப்பீடு வழங்காததுடன், கையகப்படுத்திய, விடுவிக்கப்பட்ட நிலம் குறித்த விபரத்தை வருவாய் துறைக்கு வழங்காததால், விவசாயிகள் பரிதவிக்கின்றனர்.


இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் முனுசாமி கூறியதாவது: நான்கு வழிச்சாலைக்காக இழப்பீடு தொகையை வழங்கிவிட்டதாக, உத்தரவில் தெரிவித்துள்ளனர். ஆனால், பெரும்பாலான விவசாயிகளுக்கு இழப்பீடு வரவாகவில்லை. பல நிலங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குள் பிரிக்காமலும், உறுப்பினர்களின் வங்கி கணக்கில் முழுமையாக செலுத்தாததாலும், சரியான தொகை வழங்காமலும் உள்ளனர். இதுபற்றி விவசாயிகளுக்கு உரிய விளக்கம் தரப்படவில்லை. தவிர, கையகப்படுத்திய நிலம் தவிர மற்ற நிலம் குறித்த வரைபடத்தை, சம்மந்தப்பட்ட தாலுகாவின் வருவாய் துறை கணக்கில் நேர் செய்யவில்லை. இதனால், அந்நிலத்தின் பெயரில் கடன் பெறவும், விற்பனை செய்யவும் முடியவில்லை. இதுபற்றி மாவட்ட நிர்வாகம், நில எடுப்பு டி.ஆர்.ஓ., தலையிட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X