ஓட்டு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
ஓட்டு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 செப்
2021
23:20

விழுப்புரம்-கண்டமங்கலம் ஒன்றிய ஓட்டு எண்ணும் மையத்தை கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்.



கண்டமங்கலம் ஒன்றியத்தின் ஓட்டு எண்ணும் மையமாக வளவனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக வைப்பதற்கான ஸ்ட்ராங் ரூம், ஓட்டு எண்ணும் அறை, ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டுள்ள அறை போன்ற அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்த வேண்டும்.ஓட்டு எண்ணும் மையத்தில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்று வாரியாக ஓட்டு விபரத்தினை அறிவிக்க ஒலிப்பெருக்கி வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.அப்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் வெண்ணிலா உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X