ரூ.250 கோடிக்கு மேல் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
23:23

செஞ்சி-'செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதியில் 250 கோடி ரூபாய்க்கு மேல் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது' என அமைச்சர் மஸ்தான் பேசினார்.



செஞ்சியில் ஒன்றிய தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், விஜயராகவன் வரவேற்றனர். தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் சிவா, முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், விவசாய அணி துணை அமைப்பாளர் கணேசன் முன்னிலை வகித்தனர்.தேர்தல் பொறுப்பாளர் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் 24 ஒன்றிய குழு, 2 மாவட்ட குழு உறுப்பினர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் அமைச்சர் மஸ்தான் பேசுகையில், 'தேர்தலில் அலட்சியம் கூடாது. அதே நேரம் பயப்படவும் கூடாது. வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வாக்காளர்களை 10 முறை சந்திக்க வேண்டும்.ஆட்சிக்கு வந்த 4 மாதத்தில் சிங்கவரம் ரங்கநாதர் கோவிலுக்கு 3 கோடி, மேல் மலையனுாருக்கு 2.50 கோடி, மரக்காணத்திற்கு 10 கோடி, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு 2 கட்டடங்கள், எதப்பட்டு, வல்லம் உட்பட 12 இடங்களில் துணை மின் நிலையம் என செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதியில் 250 கோடி ரூபாய்க்கு மேல் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.தேர்தலின் போது வாக்குறுதியாக சொன்னபடி செஞ்சி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன்' என்றார்.காங்., மாநில துணைத் தலைவர் ரங்க பூபதி, மாவட்ட தலைவர் ரமேஷ், ம.தி.மு.க., மாநில துணைப் பொதுச் செயலாளர் மணி, வி.சி., தனசேகர், மா.கம்யூ ., கோவிந்தராஜ், தி.மு.க., இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஆனந்த், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் மொக்தியார்அலி, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X