பிரேத பரிசோதனை செய்யாமல் பள்ளி மாணவி உடல் எரிப்பு: பெண்ணாடம் அருகே பரபரப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2021
00:39

பெண்ணாடம்-பெண்ணாடம் அருகே, பூச்சி மருந்து குடித்து சிகிச்சை பலனின்றி இறந்த பள்ளி மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூரைச் சேர்ந்தவர் அறிவழகன், 45; வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி ரஷிதா, 30; இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். மகள் பிரியதர்ஷிணி, 17, பெண்ணாடம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். கடந்த 23ம் தேதி தாய் ரஷிதா, மகளை படிக்க சொல்லி கண்டித்துள்ளார். மனமுடைந்த மாணவி, வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனை ஊழியர்கள் சம்பவம் குறித்து பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பின், மாணவியை கடலுார் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று பகல் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பின், தாய், சகோதரர் மற்றும் உறவினர்கள் மாணவியின் உடலை பகல் 12:30 மணியளவில் வெண்கரும்பூர் கொண்டு வந்தனர். பிற்பகல் 1:00 மணியளவில் பெண்ணாடம் போலீசார் வந்து, பிரியதர்ஷிணியின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கேட்டனர். ஆனால் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, உடலை எரித்தனர்.இது குறித்து வி.ஏ.ஓ., மாலா விசாரித்து பெண்ணாடம் போலீசில் கொடுத்த புகாரில், பிரேத பரிசோதனை செய்யாமல் பிரியதர்ஷிணியின் உடலை உறவினர்கள் எரித்துள்ளனர். மாணவியின் சகோதரர் தர்மேஷ், 19; தாய் ரஷிதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.இது குறித்து, சகோதரர் தர்மேஷ், தாய் ரஷிதா ஆகியோர் மீது பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X