பண்ருட்டி தொழிலாளி மர்ம சாவு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவு | கடலூர் செய்திகள் | Dinamalar
பண்ருட்டி தொழிலாளி மர்ம சாவு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 செப்
2021
00:42

பண்ருட்டி-பண்ருட்டி அருகே முந்திரி தொழிலாளி உயிரிழந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.



கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராசு, 60; இவர், பனிக்கன்குப்பத்தில் உள்ள கடலுார் தி.மு.க., எம்.பி., ரமேஷிற்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணிபுரிந்தார். கடந்த 19ம் தேதி காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.மறுநாள் அதிகாலை 2:15 மணியளவில் கம்பெனியில் கோவிந்தராசு விஷம் குடித்ததாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். கோவிந்தராசு உடலை புதுச்சேரி ஜிப்மர் டாக்டர்கள் பரிசோதிக்க வேண்டும் என உறவினர்கள் ஐகோர்ட்டில் மனு செய்தனர். கடந்த 22 ம்தேதி மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி நிர்மல்குமார் , முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரியில் ஜிப்மர் டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். கடந்த 23 ம்தேதி பிரேத பரிசோதனை ஜிப்மர் டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். மேலும் கோவிந்தராசு மர்ம மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X