இறுதி பட்டியல்! 2 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள்... காஞ்சியில் 7,036; செங்கையில் 10,884 பேர் மோதல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2021
01:35

தமிழகத்தில், விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் நடத்தப்படும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 உள்ளாட்சிகள் உட்பட, காஞ்சிபுரம் மாவட்டத்தில்7,036 வேட்பாளர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 ஆயிரத்து 884வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இரு மாவட்டங்களிலும் சேர்த்து, 3,170 பேர் 'வாபஸ்' பெற்ற நிலையில், 346 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், அக்., 6ம் தேதி முதற்கட்டமாகவும், 9ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இதில், ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி தரப்பு தவிர, அவற்றின் கூட்டணி கட்சி களை சேர்ந்தோரும், தனித்தனியே தங்கள் சார்பு வேட்பாளர்களை களம் இறக்கியிருப்பதால், தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. அரசியல் கட்சிகளின் முதுகெலும்பாக கருதப்படும் உள்ளாட்சி பதவிகளை பிடிப்பதில், அந்தந்த கட்சி நிர்வாகிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை துவக்கி, ஊராட்சிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். சின்னம் ஒதுக்கீடுஇந்நிலையில், வேட்பு மனு தாக்கல் முடிந்து, மனுக்கள் மீது கூர்ந்தாய்வு பணிகளும் முடிந்த நிலையில், மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கெடு நேற்று முன்தினம் முடிவடைந்தது.அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,327 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,843 பேரும் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். நேற்று, இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அந்தந்த ஒன்றியங்களில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஓட்டுச்சீட்டு அச்சடிக்கும் பணிகளும் துவங்கியுள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில், தள்ளுபடி செய்யப்பட்டவை, வாபஸ் பெறப்பட்டவை போக, இரு மாவட்டங்களிலும் சேர்த்து 17 ஆயிரத்து 920 பேர் தேர்தலில் களம் காண்கின்றனர். போட்டியிடுவதுஉறுதிகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 2,321 பதவியிடங்களில், 2,171 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு ஊராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். அதே போல், மாவட்ட அளவில், 145 வார்டு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு பதவிகளுக்கும் சேர்த்து 7,036 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 3,208 பதவியிடங்களில், 3,011 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மேல்மருவத்துார், தண்டலம் உட்பட 11 ஊராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.அதே போல், வார்டு உறுப்பினர் பதவிக்கு 186 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். நான்கு பதவிகளுக்கும் மாவட்ட அளவில் 10 ஆயிரத்து 884 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.------------காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டயிடுவோர் விபரம்பதவி மொத்த இடம் வேட்பு மனு தள்ளுபடி வாபஸ் போட்டியிடுவோர் போட்டியின்றி தேர்வு தேர்தல் நடக்கும் பதவிமாவட்ட கவுன்சிலர் 11 86 3 19 64 0 11ஒன்றிய கவுன்சிலர் 98 535 16 135 384 0 98ஊராட்சி தலைவர் 274 1,395 22 447 922 4 269வார்டு உறுப்பினர் 1,938 6,587 50 726 5,666 145 1,793மொத்தம் 2,321 8,603 91 1,327 7,036 149 2171செங்கல்பட்டு மாவட்டத்தில் போட்டியிடுவோர் விபரம்பதவி மொத்த இடம் வேட்புமனு தள்ளுபடி வாபஸ் போட்டியிடுவோர் போட்டியின்றி தேர்வு தேர்தல் நடக்கும் பதவிமாவட்ட கவுன்சிலர் 16 156 1 31 124 0 16ஒன்றிய கவுன்சிலர் 154 1,015 10 254 751 0 154ஊராட்சி தலைவர் 359 2,022 13 603 1,395 11 348வார்டு உறுப்பினர் 2,679 9,834 79 955 8,614 186 2,493மொத்தம் 3,208 13,027 103 1,843 10,884 197 3,011செங்கல்பட்டு மாவட்டத்தில் போட்டியிடுவோர் விபரம்பதவி மொத்த இடம் வேட்புமனு தள்ளுபடி வாபஸ் போட்டியிடுவோர் போட்டியின்றி தேர்வு தேர்தல் நடக்கும் பதவிமாவட்ட கவுன்சிலர் 16 156 1 31 124 0 16ஒன்றிய கவுன்சிலர் 154 1,015 10 254 751 0 154ஊராட்சி தலைவர் 359 2,022 13 603 1,395 11 348வார்டு உறுப்பினர் 2,679 9,834 79 955 8,614 186 2,493மொத்தம் 3,208 13,027 103 1,843 10,884 197 3,011கும்மிடிப்பூண்டியில்ஓரிடத்தில் மட்டும் தேர்தல்திருவள்ளூர் மாவட்ட கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் ஐந்து ஊராட்சிகளுக்கு உட்பட்ட ஆறு கிராம வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.அதில், மேல்முதலம்பேடு, மாநெல்லுார், ஆரம்பாக்கம் ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு உறுப்பினர் பதவிக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.எளாவூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு இருவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவர்களில் ஒருவர் நேற்று வாபஸ் பெற்றார். எஞ்சிய ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியில் ஐந்தாவது வார்டுக்கு இருவர், இரண்டாவது வார்டுக்கு நான்கு பேர் போட்டியிடுகின்றனர்.அதன்படி, கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் ஐந்து ஊராட்சிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியில் மட்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.- -நமது நிருபர் குழு- -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X