சாய் கங்கை கால்வாயில் நீர் வரத்து துவக்கம் | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
சாய் கங்கை கால்வாயில் நீர் வரத்து துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 செப்
2021
03:49

ஊத்துக்கோட்டை--ஆந்திராவின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால், சாய்கங்கை கால்வாயில் நீர்வரத்து துவங்கியுள்ளது.ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து, ஜூன், 16 முதல், தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டது.



சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவ மழை துவங்கவுள்ள நிலையில், கிருஷ்ணா நீரை நிறுத்த வேண்டும் என, ஆந்திர நீர்வளத் துறையிடம் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, 21ம்தேதி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஜூன் முதல், 5.2 டி.எம்.சி., நீர் தமிழகத்திற்கு கிடைத்தது. இதில், 4.47 டி.எம்.சி., நீர், 2021 - 22ம் ஆண்டு நீர் வழங்கும் கணக்கில் சேர்க்கப்பட்டது.இந்நிலையில், ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் சாய்கங்கை கால்வாய் அமைந்துள்ள, ஆந்திர மாநிலத்தில், தற்போது மழை பெய்து வருகிறது. இதனால், சாய்கங்கை கால்வாய் வழியே, தமிழகத்துக்கு மழை நீர் வரத்து துவங்கியுள்ளது. இந்த மழை நீரை கணக்கில் சேர்க்க முடியாது. எனவே, நீர்வரத்து எவ்வளவு என்பதை கூற முடியாது தமிழக நீர்வளத் துறையினர் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X