விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மூன்றாவது மாபெரும் தடுப்பூசி முகாம் நடந்தது.
விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 239 முகாம்கள் அமைக்கப்பட்டு 20,199 பேருக்கும், சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 275 முகாம்கள் அமைக்கப்பட்டு 40,666 பேருக்கும் என ஒரே நாளில் 514 தடுப்பூசி முகாம்களில் 60,865 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சிவகாசி: சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் நடந்த முகாமை கலெக்டர் மேகநாத ரெட்டி ஆய்வு செய்தார். அசோகன் எம்.எல்.ஏ., நகராட்சி கமிஷனர்கள் பார்த்தசாரதி, ரவிச்சந்திரன், சுகாதாரத் துறை துணை இயக்குனர் கலுசிவலிங்கம், சப் கலெக்டர் பிருதிவிராஜ், தாசில்தார் ராஜ்குமார், பி.டி.ஓ., ராம்ராஜ் பங்கேற்றனர்.
செங்கமல நாச்சியார்புரத்தில் நடந்த முகாமை ஊராட்சி தலைவர் கருப்பசாமி, ஆனையூர் ஊராட்சியில் தலைவர் லட்சுமி நாராயணன், தேவர் குளம் ஊராட்சியில் தலைவர் முத்து வள்ளி, பள்ளபட்டி ஊராட்சியில் தலைவர் உசிலை செல்வம் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.