தி.மு.க., கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
தி.மு.க., கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 செப்
2021
06:22

சாத்துார் : சாத்துாரில் தி.மு.க. கூட்டணி கட்சியினரின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.



அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தலைமை வகித்து பேசியதாவது: ஊரக உள்ளாட்சியில் 19 வது வார்டு மாவட்டக் கவுன்சிலர் தேர்தலில் சென்ற முறை 12 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடந்து வருகிறது. இந்த இடைத்தேர்தலில் 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும், என்றார்.



முன்னாள் எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், ரகுராமன் எம்.எல்.ஏ., இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் ராமசாமி, காங்., மாவட்ட தலைவர் ரங்கசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சதுரகிரி, தி.மு.க. நகர செயலாளர் குருசாமி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், கடற்கரை ராஜ் , கிருஷ்ணகுமார், ஜெயப் பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் பகவதி திருவேங்கடசாமி , ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் குணசேகர், பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் அர்சுனன், விஜயகுமார் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X