சாத்துார் : சாத்துார் எஸ்.ஜ., பாண்டியன் தலைமையில் போலீசார் நான்கு வழிச்சாலை படந்தால் சந்திப்பு ரோட்டில் வாகன சோதனை செய்தனர். சிவகாசி வெள்ளையாபுரத்தை சேர்ந்த கமலக்கண்ணன் 24, ஓட்டி வந்த ஆம்னி கார் நிற்காமல் சென்றது. போலீசார் உப்பத்துார் விலக்கில் விரட்டி பிடித்த போது காரில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. கடத்தப்பட்ட மொத்தம் 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேல்விசாரணை நடக்கிறது.