ஸ்ரீவில்லிபுத்துாரில் கூலிப்படை பதுங்கல் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
ஸ்ரீவில்லிபுத்துாரில் கூலிப்படை பதுங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 செப்
2021
06:29

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை அடிவார பகுதியில் உள்ள தோப்புகளில் கூலிப்படையினர் பதுங்கியுள்ளதாக வந்த தகவலையடுத்து திருநெல்வேலி மாவட்ட போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர்.



தென்மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொலை சம்பவங்களில் தொடர்புடைய கூலிப்படையினர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை அடிவார தோப்புகளில் பதுங்கியுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் விருதுநகர் எஸ்.பி., மனோகர், திருநெல்வேலி ஏ.டி.எஸ்.பி., ராஜாராம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருநெல்வேலி டி.எஸ்.பி.க்கள், 50க்கும் மேற்பட்ட போலீசார் நள்ளிரவு 12:00 மணி முதல் திருவண்ணாமலை மலை அடிவார தோப்புகளில் தேடுதல் வேட்டை நடத்தினர்.



அதிகாலை 5:00 மணி வரை நடந்த இச்சோதனையில் யாரும் சிக்கவில்லை என்பதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கும் பொருட்டு மலையடிவாரத்தில் சந்தேகத்துக்குரிய நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X