தென் மண்டல அளவிலான செஸ் போட்டி | விருதுநகர் செய்திகள் | Dinamalar
தென் மண்டல அளவிலான செஸ் போட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 செப்
2021
06:36

ராஜபாளையம் : ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் தென் மண்டல அளவிலான பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இடையேயான செஸ் போட்டி நடந்தது.6 மாவட்டங்களை சேர்ந்த 80 பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். தாசில்தார் ராமச்சந்திரன் துவங்கி வைத்தார். சர்வதேச நடுவர் அனந்தராம் மேற்பார்வையில் போட்டிகள் நடந்தன.



ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் மாவட்ட செஸ் சங்க தலைவர் கோபால்சாமி, ராம்கோ குழும சி.இ.ஓ., வெங்கட்ராஜ், கல்லுாரி முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை ஏ.பி.எஸ்., செஸ் அகாடமி தலைவர் பால்ராஜ் கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து செய்திருந்தார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X