புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டடப்பணிகள் 90 சதவீதம் நிறைவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2021
06:44

ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை அமைக்க 2020 மார்ச் 1ல் அப்போதைய முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். கட்டடப்பணிகள் ரூ.345 கோடியில் வேகமாக நடக்கிறது. தற்போதைய நிலையில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.



கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கல்லுாரி மாணவர் வகுப்பறை கொண்ட மெயின் பிளாக், ஆய்வகம், மாணவர் விடுதிகள், ஆடிட்டோரியம், டீன் அலுவலகம், குடியிருப்புகள், மருத்துவக்கல்வி பேராசிரியர்கள் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் படுக்கைகளுக்கான கட்டடம், பரிசோதனை கூடம் உள்ளிட்ட கட்டடப்பணிகள்நடக்கிறது.



இந்த பணிகளும் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளன.தற்போது முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அனைத்து கட்டடங்கள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதிகள் கட்டுமானப்பணிகள் 10 சதவீதம் மட்டுமே மீதம் உள்ளது. இதில் பெயின்டிங், தண்ணீர் குழாய்கள் அமைப்பு, கழிவறைகளுக்கு குழாய் அமைப்பு, மின்விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட வேலைகள் மட்டுமே உள்ளன. கல்லுாரி மெயின் பிளாக் கட்டடம் தரை தளத்துடன் ஏழு மாடிகள் கொண்டது.



இந்த கட்டடப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான விடுதி பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.



கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்



அரசு மருத்துவக்கல்லுாரிக்கு உடனடியாகபாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலையில், தற்போது இங்கு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. மருத்துவக்கல்லுாரி, மாணவர் விடுதி கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, இங்கு அமைக்கப்படும் பூந்தோட்டம், மரக்கன்றுகளுக்கு பயன்படுத்த உள்ளனர்.மேலும் சுத்திகரித்த நீரை கழிப்பறை சுத்தம் செய்தல் போன்ற பணிகளுக்கும் பயன்படுத்த உள்ளனர். மருத்துவமனை கட்டடப்பணிகளில் 750 படுக்கைகள் தேவை என்ற நிலையில் கூடுதலாகவே 800 படுக்கைகள் உள்ளன.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X