தேயிலை ஏலத்தில் தொடர் சரிவு | நீலகிரி செய்திகள் | Dinamalar
தேயிலை ஏலத்தில் தொடர் சரிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 செப்
2021
08:25

குன்னுார்:குன்னுாரில் நடந்த தேயிலை ஏலத்தில், ஒரே வாரத்தில், 2.33 கோடி ரூபாய் வீழ்ச்சி ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை ஏல மையத்தில், 38வது ஏலம் நடந்தது. இலை ரகம், 13.49 லட்சம் கிலோ, துாள் ரகம், 4.46 லட்சம் கிலோ என மொத்தம், 17.85 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. மொத்தம் 13.69 லட்சம் கிலோ விற்பனை ஆனது. சராசரி விலை, கிலோ 92.45 ரூபாயாக இருந்தது. 12.65 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.கடந்த வாரத்தை விட, 47 ஆயிரம் கிலோ விற்பனை சரிந்தது; ஒரே வாரத்தில் மொத்த வருமானம் 2.33 கோடி ரூபாய் வீழ்ச்சியை சந்தித்தது.கடந்த ஜூலை மாதத்தில் இருந்து தேயிலை தொழில், தொடர் சரிவை கண்டு வருவதால், உற்பத்தியாளர்கள், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X