மின்சாரம் தாக்கி யானை பலி: புதைத்த இருவர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2021
08:32

கோத்தகிரி:கோத்தகிரி அருகே வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி இறந்த யானையை, யாருக்கும் தெரியாமல் புதைத்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.நீலகிரி வனக் கோட்டம், கீழ்கோத்தகிரி வனச்சரகத்துக்கு உட்பட்ட கெங்கரை வனப்பகுதியில், நான்கு ஆண்டுகளுக்கு முன் மின்சாரம் தாக்கி பெண் யானை இறந்துள்ளது. இறந்த யானையை, வனத்துறைக்கு தெரிவிக்காமல் சிலர் புதைத்துள்ளனர்.வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல்படி, உதவி வனபாதுகாவலர் சரவணகுமார் மற்றும் கோத்தகிரி ரேஞ்சர் சிவா தலைமையில் வனத்துறையினர் நடத்திய விசாரணையில், மெட்டுகல் ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த காட்டுராஜா,27, ஈஸ்வரன்,40, குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.இதை தொடர்ந்து குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவரையும் யானை புதைக்கப்பட்ட இடத்துக்கு அழைத்து சென்றனர். கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறையினர் முன்னிலையில், குழியை தோண்டி யானையின் எலும்புக்கூடுகள் சேகரிக்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் கோர்ட் காவலில் வைக்கப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய நிதிஷ்குமார், 24, இறந்துவிட்டார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X