ஓசூர்: தர்மபுரி மாவட்டம், அதகபாடியைச் சேர்ந்தவர் பூவரசன், 19; ஓசூர் அடுத்த பாகலுாரில் தங்கி, வெல்டிங் பட்டறையில் பணியாற்றி வந்தார்.
இவருடன் பணியாற்றியவர்கள் சயீப், 20; ஆபித், 20.நண்பர்களான மூவரும், நேற்று மாலை 6:00 மணிக்கு மாலுார் - பாகலுார் சாலையில், டி.வி.எஸ்., மொபட்டில் சென்றனர். சயீப் ஓட்டினார். பிரிமியர் மில் அருகே, எதிரே வந்த ஆட்டோவும், மொபட்டும் நேருக்கு நேர் மோதின.இதில் சயீப், ஆபித் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த பூவரசன், மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.