விதிமுறை மீறும் தனியார் ஆலை: கண்ணாமூச்சி! பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் புகார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

28 செப்
2021
01:35
பதிவு செய்த நாள்
செப் 27,2021 23:19

பல்லடம்:விதிமுறை மீறும் தனியார் ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக, விவசாயிகள், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரியிடம் புகார் அளித்தனர்.திருப்பூர் மாவட்டம், குண்டடம் - சங்கராண்டாம்பாளையத்தில், தனியார் இரும்பு உருக்கு ஆலை அமைந்துள்ளது. இதனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி, ஆலையின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.



இது குறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:நீர், மண், மற்றும் விவசாய தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்படியாக, பல்வேறு இடங்களில் தனியார் ஆலைகள் செயல்படுகின்றன. விதிமுறைகளை மீறும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.ஆனால், நடவடிக்கை வெறும் கண் துடைப்பாக மட்டுமே இருக்கிறது. அவ்வாறு, குண்டடம் பகுதியில் உள்ள இரும்பு ஆலையால் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி, கருத்துக்கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தோம். இருந்தும், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதேபோல், அனுப்பட்டியில் உள்ள ஆலையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவது தெரிந்தும், சம்பந்தப்பட்ட ஆலைகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.



திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாடு வாரிய கோட்ட பொறியாளர் சாமிநாதன் கூறியதாவது:விதிமுறை மீறி செயல்பட்ட பல்வேறு நிறுவனங்கள் மீது கடந்த காலங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேல் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அதிகாரம் கிடையாது.மாவட்ட குழுவின் மூலம் மட்டுமே கூடுதல் நடவடிக்கை எடுக்க முடியும். விதிமீறும் ஆலைகள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுப்பதற்கு உண்டான வழிமுறைகள் குறித்து கேட்டுள்ளோம். ஒருசில தினங்களில் அது தொடர்பான பதில் கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


குண்டடம் பகுதியில் உள்ள இரும்பு ஆலையால் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி, கருத்துக்கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தோம். இருந்தும், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X