மதுக்கடை 'பாரில்' தகராறு வாலிபர் அடித்து கொலை? | திருப்பூர் செய்திகள் | Dinamalar
மதுக்கடை 'பாரில்' தகராறு வாலிபர் அடித்து கொலை?
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 செப்
2021
23:40

அனுப்பர்பாளையம்:தேனி மாவட்டம், சின்னமனுாரை சேர்ந்தவர் பாபு ராஜா, 37. கடந்த ஆறு மாதத்துக்கு முன், பெருமாநல்லுார் அருகே வசிக்கும் தனது பெற்றோரை பார்க்க வந்த அவர், மதுக்கடை 'பாரில்' தகராறு செய்துள்ளார்.இதுகுறித்து, 'பார்' உரிமையாளர் கண்ணப்பன் கொடுத்த புகாரின் பேரில் பெருமாநல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஜாமினில் வெளியே வந்த பாபு ராஜா, சின்னமனூரில் வசித்து வந்தார். தனது தாய், தந்தையை பார்க்க திருப்பூர் வந்துள்ளார்.தொடர்ந்து, நேற்று காலை ஊர் திரும்ப பெருமாநல்லுார் பஸ் ஸ்டாப் சென்ற, அவர் திடீரென அங்கு மதுக்கடை 'பாருக்கு' சென்றார். '10 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு' தகராறில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்தவர்கள், அவரை கடுமையா தாக்கினர்.படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இது குறித்து, பெருமாநல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 'பார்' உரிமையாளர் கண்ணப்பன் உட்பட, ஐந்து பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பிரச்னைகள்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X