அரசு வழங்கிய நிலத்துக்கு பட்டா கேட்டு கலெக்டர் அலுவலக கேட்டை இழுத்து மூடி நரிக்குறவர்கள் போராட்டம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
அரசு வழங்கிய நிலத்துக்கு பட்டா கேட்டு கலெக்டர் அலுவலக கேட்டை இழுத்து மூடி நரிக்குறவர்கள் போராட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 செப்
2021
23:58

பெரம்பலுார், செப். - அரசு வழங்கிய நிலத்துக்கு பட்டா கேட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கேட்டை இழுத்து மூடி நரிக்குறவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலுார் மாவட்டம், எறையூரில் வசித்து வரும் நரிக்குறவர் சமூகத்தினர், 166 பேருக்கு சுமார் 46 ஆண்டுகளுக்கு முன் 333 ஏக்கர் நிலம் அரசு சார்பில் வழங்கப்பட்டு, அவர்கள் அந்நிலத்தில் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.



இந்நிலையில், கடந்த 11ம் தேதி நரிக்குறவர்கள் தங்களது நிலத்தில் உழவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த வருவாய்த்துறை அலுவலர்கள் விவசாயம் செய்யக் கூடாது என தடுத்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த நரிக்குறவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் தரையில் உருண்டு புரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். விவசாயம் செய்ய உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் எனக்கோரிக்கை விடுத்தனர்.


இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட நரிக்குறவர்களுடன், கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா பேச்சுவார்த்தை நடத்தினார். ஓரிரு நாளில் எறையூருக்கு நேரில் வந்து பார்வையிட்ட பிறகு விவசாயம் செய்ய அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்யலாம் என தெரிவித்தார். இதையடுத்து தர்ணா போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். ஆனால் அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இதைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் அனைவரையும் அலுவலர்கள் அனுமதிக்க போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த நரிக்குறவர்கள் அரசு வழங்கிய நிலத்துக்கு பட்டா கேட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கேட்டை நேற்று மதியம் 2 மணி அளவில் இழுத்து மூடி நரிக்குறவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X