ஊழலில் ஊறிய அதிகாரிகளுக்கு வருகிறது 'டிரான்ஸ்பர்' உத்தரவு! கிளம்பு... காத்து வரட்டும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

28 செப்
2021
01:48
பதிவு செய்த நாள்
செப் 28,2021 00:58

கோவை:கோவை மாநகராட்சியில், டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையால், மற்ற அதிகாரிகள் பீதியில் உறைந்திருக்கின்றனர்.



தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கோவை மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் அனைவரும் வெவ்வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே, கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் உடனடியாக மாற்றப்பட்டனர். கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததும், நகர் நல அலுவலர் மாற்றப்பட்டார்.



இதேபோல், அனைத்து பிரிவு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றப்படுவது உறுதி என்கிற கருத்து உலவியது.ஆனால், சுகாதார ஆய்வாளர்கள் மட்டும், மாநகராட்சி எல்லைக்குள் மண்டலம் விட்டு மண்டலம் மாற்றப்பட்டனர். உதவி கமிஷனர் அந்தஸ்தில் இருப்பவர்கள், கிரேடு-1 ஆபீசர்கள் என்பதால், தமிழக அரசே உத்தரவிட வேண்டும். இருப்பினும், அவர்களுக்கு, வெவ்வேறு மண்டலங்களுக்கு இட மாறுதல் வழங்கப்பட்டது.



அடுத்த கட்டமாக, உதவி/ இளம் பொறியாளர்களை மாற்றுவதற்கும், அ.தி.மு.க., ஆட்சியில் இரவோடு இரவாக நியமித்த இளநிலை உதவியாளர்கள் பட்டியல் கோப்பும், துாசி தட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், துணை கமிஷனராக இருந்த விமல்ராஜ், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது, மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.



இதைத்தொடர்ந்து, டெண்டர் முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு அதிகாரிகள், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். மூன்று அதிகாரிகள் வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் செய்யப்பட்டிருக்கின்றனர். இத்தகைய அதிரடி நடவடிக்கை, பொறியியல் பிரிவினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


ஏனெனில், பொறியியல் பிரிவில் ஒரு வேலை செய்வதாக இருப்பின், 'எம்' புக் (அளவீட்டு புத்தகம்) தயாரிப்பர். அது, குறிப்பிட்ட வேலையின் ஜாதகத்தை சொல்லும்.உதவி பொறியாளர், உதவி நிர்வாக பொறியாளர், நிர்வாக பொறியாளர், நகர பொறியாளர் என, பொறியியல் பிரிவை சேர்ந்த அனைத்து அலுவலர்களின் கையெழுத்தும் அதிலிருக்கும். அதனால், அப்பிரிவை சேர்ந்த அனைத்து அலுவலர்களும், இட மாறுதலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இதேபோல், மண்டல உதவி கமிஷனர்களாக இருந்தவர்களில் சிலர், அ.தி.மு.க., ஆட்சியில், அக்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு இருக்கிறது. அவர்களும், தங்களுக்கு மாறுதல் உத்தரவு வருமோ என்கிற பீதியில் இருக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-செப்-202108:55:51 IST Report Abuse
பேசும் தமிழன் ஊழலில் ஈடுபட்டால்.. பணி நீக்கம் தானே செய்ய வேண்டும்... அதென்ன... பணி மாறுதல்.... அவன் அங்கே போயும் அதே வேலையை (ஊழல்) தானே பார்க்க போலிறான்
Rate this:
Cancel
28-செப்-202107:40:31 IST Report Abuse
அப்புசாமி ஆமா... இந்த ஊரில் ஊழல் செஞ்சு புகார் வந்தா வேற ஊருக்கு, வேறே துறைக்கு மாத்திருவாங்க. அங்கே போய் தொழிலை கண்ட்டிநியூ பண்ணச் சொல்லி கடுமையா தண்டிச்சுருவாங்க. இதுக்கு பதிலா கட்டி வெச்சு காலில் கிச்சு கிச்சு மூட்டி தண்டிக்கலாம்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
28-செப்-202105:05:52 IST Report Abuse
Mani . V நல்ல காமெடி. டிரான்ஸபர் செய்தால் அங்கு போய் ஊழல் செய்ய முடியாதா அல்லது செய்யாமல்தான் இருந்து விடுவார்களா? ஏன் பணி நீக்கம் செய்ய முடியாதா? ஏனென்றால் அதற்கு அவர்கள் இவர்களுக்கு லஞ்சம் கொடுத்திருப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X