கூவம் ஆற்றை ஒட்டிய கட்டட பணி நிறுத்தி வைக்க தீர்ப்பாயம் உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2021
01:42

சென்னை : அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றை ஒட்டி கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.



தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், அரும்பாக்கம் பகுதியில் கூவம் ஆற்றை ஒட்டி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக, கூவம் ஆற்றில் தண்ணீர் செல்லும் பாதையில் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன. கூவத்தில் தண்ணீர் செல்வதை தடுக்கும் வகையில் கட்டடம் கட்டப்படுவதால், இதற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என, தேவராஜன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த தீர்ப்பாயம், கூவத்தில் ஏதேனும் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டிருந்தால், அவற்றை அகற்ற வேண்டும்.



அதே வேளையில், கூவம் ஆற்றின் எல்லையை வருவாய் துறையினர் வரையறுத்து, ஆற்றில் கட்டட கழிவுகள் போன்றவை கொட்டப்படுவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.மேலும், கூவம் ஆற்றை பாதுகாக்கும் வகையில், சுதந்திரத்துக்கு முன், கூவம் ஆற்றின் எல்லை எப்படி இருந்தது என்பதை, வருவாய் துறையினர் வாயிலாக உறுதி செய்ய வேண்டும். கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்தை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, சென்னை மாவட்ட கலெக்டர் அல்லது உதவி கலெக்டர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி, மத்திய சுற்றுச்சூழல் துறையின் மூத்த அதிகாரி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் உள்ளிட்டோர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.இதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கை:சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைக்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வரும் பணிகள் சம்பந்தமாக சில பிரச்னைகள் இருப்பதால், இந்த பிரச்னை முடிவடையும் வரை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கூவம் ஆற்றில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது. கூவம் ஆற்றில் தண்ணீர் செல்லும் பாதையில், வீட்டு வசதி வாரியம், தீர்ப்பாய உத்தரவுக்கு புறம்பாக கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு, நீதிபதி ராமகிருஷ்ணன், உறுப்பினர் சத்யகோபால் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கூவம் ஆற்றில் தண்ணீர் செல்லும் பாதையில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுவதாக நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



எனவே, கட்டுமான பணியில் மேற்கொண்டு எந்த பணியும் நடைபெறாத வகையில், தற்போதைய நிலை தொடர வேண்டும்.கூவம் ஆற்றில் கட்டுமான கழிவுகளை அகற்றுவதில் எந்த தடையும் இல்லை. வருவாய் ஆவணங்கள் அடிப்படையில், கூவம் ஆற்றின் எல்லை அளவிடப்பட்டது குறித்து, நிபுணர் குழு தன் அறிக்கையில் தெரிவிக்கவில்லை. நில அளவை துறையால், கூவம் ஆற்றின் எல்லை வரையறுக்கப்பட்டுள்ளதா, அவ்வாறு எல்லையை நிர்ணயிக்கும் போது, ஏதேனும் ஆட்சேபம் வந்ததா, இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் நிலை என்ன என்பதை, நிபுணர் குழு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.நிபுணர் குழுவின் பரிந்துரையை, தமிழக வீட்டு வசதி வாரியம் நிறைவேற்றி உள்ளதா, தண்ணீர் சீராக செல்லும் வகையில் கட்டுமான கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதா என, நிபுணர் குழு மீண்டும் ஆய்வு செய்து, அக்., 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
29-செப்-202111:35:51 IST Report Abuse
JeevaKiran மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் இந்த கட்டுமானங்களுக்கு பக்கத்து கட்டிடம்தான். அவர்களும் ஒரு நடவடிக்கையும் எடுக்க காணோம்?
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
28-செப்-202117:48:37 IST Report Abuse
JeevaKiran இதில் பெரிய காமெடி என்னவென்றால், பசுமை தீர்ப்பாய அலுவலகம் இந்த கட்டுமானங்களுக்கு ஒரு சில மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. இத்தனை நாளாக இவர்களுக்கு எப்படி தெரியாமல் போனது. யாரவது வழக்கு போட்டால்தான் இவர்களும் நடவடிக்கை எடுப்பார்களா?????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X