ரூ.23 கோடி மதிப்பு கோவில் நிலம் மீட்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2021
02:03

மதுரவாயல் : மதுரவாயல் மார்க்க சகாய ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 23 கோடி ரூபாய் மதிப்புள்ள, 11 ஆயிரத்து, 512 சதுர அடி நிலத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறைஅதிகாரிகள் மீட்டனர்.



மதுரவாயல் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பல்கலை அருகே, மதுரவாயல் மார்க்க சகாய ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 8.5 ஏக்கர் நிலம் உள்ளது.இங்கு, 350க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளது என, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தை கையகப்படுத்தும் பணியில், அத்துறை ஈடுபட்டு வருகிறது. 'சீல்' வைப்புஇந்நிலையில், 23ம் தேதி, 1,222 சதுர அடி பரப்பளவு நிலத்தில், 9 ஆக்கிரமிப்பு கட்டடங்களில் இருந்த, 23 கடைகளுக்கு அறநிலையத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.



தொடர்ச்சியாக, ஹிந்துசமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கவெனிதா தலைமையில், நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் மற்றும் ஊழியர்கள் நேற்று காலை, அதே பகுதியில் உள்ள, 11 ஆயிரத்து, 512 சதுர அடி பரப்பளவு நிலத்தில், நான்கு ஆக்கிரமிப்பு கட்டடங்களில் உள்ள, ஏழு கடைகள் மற்றும் ஒரு காலியாக இருந்த கட்டடத்திற்கும் சீல் வைத்தனர்.தற்போது மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு, 23 கோடி ரூபாய் என, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X