உணவில் கலப்படம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு | சென்னை செய்திகள் | Dinamalar
உணவில் கலப்படம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 செப்
2021
02:10

வியாசர்பாடி : வியாசர்பாடி அரசு பள்ளியில், உணவு பொருட்கள் கலப்படம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 'ஆரோக்கிய வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம்' என்ற தலைப்பில், வியாசர்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.



இதில், உணவு கலப்படம்,அதனால் ஏற்படும் தீமை, தடுக்கும் வழிமுறை, உணவு பாதுகாப்பு சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், கடுகு, டீ துாள், மிளகு உள்ளிட்ட பொருட்களில் கலப்படம் கண்டுபிடிப்பது குறித்தும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X