இழப்பீடு வழங்காமல் வனத்துறை இழுத்தடிப்பு! வனவிலங்குகள் ஏற்படுத்திய சேதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2021
02:11

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், வன விலங்குகளால் ஏற்பட்ட உயிர், பயிர் சேதத்துக்கு, வனத்துறையினர் கடந்த இரு ஆண்டுகளாக இழப்பீடு வழங்காமல், இழுத்தடிப்பதாக, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.



கோவை புறநகர் பகுதியில், மலையோர கிராமங்களில், வனவிலங்குகள், விவசாய பயிர்களை அழித்து சேதம் ஏற்படுத்துவதும், மனித-வனவிலங்கு மோதல்களில் உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்துக்கு, சேதத்தின் மதிப்பில், வனத்துறையினர் 30 சதவீதம் வரை இழப்பீடு, வழங்குகின்றனர்.இதேபோல உயிரிழப்புக்கு, இழப்பீடு, 5 லட்சம் ரூபாயாக, அதிகரிக்கப்பட்டுள்ளது.கடந்த இரு ஆண்டுகளாக, வன விலங்குகளால் காயமடைந்தவர் மற்றும் உயிரிழப்புக்கு இழப்பீடுகள் வழங்கப்படவில்லை.



அலைக்கழிப்பு


இதுகுறித்து, மலையோர கிராம மக்கள் கூறியதாவது:வன விலங்குகளால், மனித உயிர்களுக்கும், பயிர்களுக்கும் பெரும் சேதம் ஏற்படுகிறது. யானை, காட்டுமாடு, மான், காட்டுப்பன்றி உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளின் பட்டியலில் உள்ளதால், அவற்றைத் தடுக்க முடியாமல், விவசாயிகள் தவிக்கின்றனர்.பயிர் சேதத்தில் மொத்த இழப்பில், 15 முதல், 20 சதவீதம் மட்டுமே வழங்குகின்றனர். யானையால் சேதப்படுத்தப்படும் வாழை, தென்னை மரங்களுக்கு, 100 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே இழப்பீடு தருகின்றனர்.



அந்தத் தொகைக்கும், வனத்துறை அலுவலகத்துக்கு ஆண்டுக்கணக்கில் நடக்க வேண்டியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, வனத்துறையினரால், எவ்வித இழப்பீடு தொகையும் வழங்கப்படவில்லை.பயிர் சேதத்துக்கு இழப்பீடு தொகையை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.வனத்துறை விளக்கம்இதுகுறித்து, வனத்துறையினர் கூறுகையில்,'வன விலங்குகளால், காயமடைந்தோர் மற்றும் உயிரிழந்தோர் விபரம், பயிர் சேதம் ஏற்பட்டவர்களுக்கு இழப்பீடு குறித்த பரிந்துரைகள், தகுந்த ஆவணங்களுடன், மாவட்ட வன அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு சில நாட்களில், இதற்கான தொகை விடுவிக்கப்படலாம்' என்றனர்.



10 கோடி ரூபாய் ஒதுக்கீடு


வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சட்டசபையில் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், 'மனித-வன உயிரின மோதலை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், மனித உயிரிழப்புகள், காயமடைதல் போன்ற சேதங்களை தவிர்க்க இயலாமல் போகிறது. இந்த ஆண்டு வன விலங்குகளால் ஏற்பட்ட உயிரிழப்பு, காயம் மற்றும் பயிர் சேதம் போன்றவற்றுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் இந்த ஆண்டு நிவாரணத்தொகைக்கென, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X