அரசு கல்லூரி மாணவர்கள் ஆரோக்கிய இந்தியா ஊர்வலம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
அரசு கல்லூரி மாணவர்கள் ஆரோக்கிய இந்தியா ஊர்வலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 செப்
2021
04:46

விழுப்புரம் : விழுப்புரத்தில் நேருயுவகேந்திரா மற்றும்அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ஆரோக்கிய இந்தியா ஊர்வலம் நடந்தது.



விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில் நடந்த ஊர்வலத்தை நேருயுவகேந்திரா காந்தி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பிரகாஷ், வெங்கடேசன், தனம், சுடர்கொடி ஆகியோர் துவக்கி வைத்தனர். முன்னதாக, ஆரோக்கிய இந்தியா உறுதிமொழியேற்றனர். நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், நேருயுவகேந்திரா தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.கல்லுாரியில் துவங்கிய ஊர்வலம் மாவட்ட விளையாட்டு அரங்கம் வழியாக காகுப்பம் வரை சென்று மீண்டும் கல்லுாரியை வந்தடைந்தது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X