அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்: முன்னாள் முதல்வர் பங்கேற்பு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்: முன்னாள் முதல்வர் பங்கேற்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 செப்
2021
05:01

விழுப்புரம் : ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.



இளைஞரணி செயலாளர் பசுபதி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் மணியன், அமைப்பு செயலாளர் ராமச்சந்திரன், அவைத் தலைவர் கண்ணன், துணைச் செயலாளர் சக்கரபாணி, அர்ச்சுனன் எம்.எல்.ஏ., ஜெ., பேரவைச் செயலாளர் முரளி என்கிற ரகுராமன், ஆவின் தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர்.இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் பழனிசாமி, உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களின் வெற்றிக்கான ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்.



மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் கதிரவன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முகமது ெஷரீப், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ராஜேந்திரன், மகளிரணி செயலாளர் தமிழ்ச்செல்வி, மாணவரணி செயலாளர் சக்திவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஸ்ரீதரன், அணி செயலாளர்கள் முருகவேல், அம்ருதீன், பாலகிருஷ்ணன், ஜெயராமன், ஜெயபிரகாஷ், ஜெ., பேரவை தலைவர் ராமதாஸ், துணைச் செயலாளர் திருப்பதி பாலாஜி, நகர எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் குமரன், ஜெ., பேரவைத் தலைவர் சேகர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X