கிடப்பில் திடக்கழிவு பூங்கா பணிகள்; நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பை | மதுரை செய்திகள் | Dinamalar
கிடப்பில் திடக்கழிவு பூங்கா பணிகள்; நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பை
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 செப்
2021
06:19

வாடிப்பட்டி : வாடிப்பட்டி பேரூராட்சி 18 வார்டுகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பல கிராமங்களை ஒருங்கிணைக்கும் முக்கிய நகரமாகும்.இங்கு வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பையை சிறுமலை ஓடைகள், ரோட்டோரங்கள், கண்மாய்களில் கொட்டி எரிக்கின்றனர். இதனால் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடுகிறது. சாலையில் செல்பவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.



குலசேகரன் கோட்டை மலையடிவாரத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பையை சேகரிக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்ட நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அகற்றப்படாத பாறைகளுக்கு மத்தியில் குப்பையை பேரூராட்சியினர் கொட்டுகின்றனர். இதனால் அருகே இருக்கும் தோட்டங்கள் வனவிலங்குகள் பாதிக்கும் நிலை உள்ளது,பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சேதுராமன்:இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X