பராமரிப்பில்லாத ரோடால் அவதி | மதுரை செய்திகள் | Dinamalar
பராமரிப்பில்லாத ரோடால் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 செப்
2021
06:41

செல்லம்பட்டி : செல்லம்பட்டி ஒன்றியத்தில் வடக்கம்பட்டியிலிருந்து பாலூத்துப்பட்டி, மாயங்குரும்பன்பட்டி வழியாக பூச்சம்பட்டி சமத்துவபுரம் செல்ல 2.5 கி.மீ.,க்கு இணைப்பு ரோடு உள்ளது.



இருபதாண்டுகளுக்கு முன் சமத்துவபுரம் துவக்கிய போது இந்த ரோடு அமைக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பின்றி தற்போது தார் பெயர்ந்து தூர்ந்து போயுள்ளது. ரோட்டை சீரமைக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் குருசாமி, ராஜேந்திரன், முருகன், முத்துப்பாண்டி மற்றும் கிராமத்தினர் மறியல் அறிவித்தனர்.கலெக்டர் அனுமதி பெற்று 6 மாதத்திற்குள் ரோடு சீரமைக்கைப்படும் என தாசில்தார் விஜயலட்சுமி, செக்கானூரணி இன்ஸ்பெக்டர் சிவசக்தி, செல்லம்பட்டி ஒன்றிய கமிஷனர் ராஜா, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மணிமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களை சமரசப்படுத்தினர். அதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X