செய்திகள் சில வரிகளில்... இறகு பந்து போட்டி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2021
08:11

கிணத்துக்கடவு, சொலவம்பாளையத்தில் ஜோஸ்போர்ட்ஸ் அகாடமியில், சிறுவர் முதல், வயதானவர்கள் வரை, இறகு பந்து விளையாட பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சி பெற்றவர்களுக்கு இடையே, கடந்த, 22ம் தேதி முதல், ஒற்றையர், இரட்டையர் என, 17 பிரிவுகளாக, போட்டிகள் நடத்தப்பட்டன. மூன்று நாட்கள் நடந்த போட்டியில், 70 பேர் பங்கேற்றனர்.



பரிசளிப்பு விழாவில், கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ., கணேசமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் ஜெகன், துணை தாசில்தார் ராமராஜ் ஆகியோர் பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும், கோப்பையும் பரிசாக வழங்கினர். அகாடமியின் இறகு பந்து பயிற்சியாளர் வெங்கடாசலபதி போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.



தொழிலாளிக்கு விபத்து நஷ்டஈடு


வால்பாறை, இஞ்சிப்பாறை எஸ்டேட்டில் பணியாற்றும் குணசேகரன், கடந்த, 2013ம் ஆண்டு மரங்களில் கிளையை வெட்டும் போது, கிழே விழுந்து விபத்துக்குள்ளானார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு விபத்து நஷ்ட ஈடுவழங்க கோரி, அண்ணா தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு நஷ்டஈடாக, 80,035 ரூபாய் வழங்க, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.ஆனால், மேற்படி நஷ்டஈடு தொகையை சம்பந்தப்பட்ட எஸ்டேட் நிர்வாகம் வழங்கவில்லை. இதனையடுத்து, ஏ.டி.பி., தொழிற்சங்கத்தின் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.


சம்பந்தப்பட்ட எஸ்டேட் நிர்வாகம், பாதிக்கபட்ட தொழிலாளிக்கு, வட்டியுடன், நஷ்ட ஈடாக, ஒரு லட்சத்து, 50 ஆயிரத்து, 335 ரூபாய் வழங்கியது. காசோலையை, ஏ.டி.பி., தொழிற்சங்க மாநில தலைவர் அமீது, பாதிக்கப்பட்ட தொழிலாளி குணசேகரனிடம் வழங்கினார்.



பா.ஜ., இளைஞரணி ரத்த தானம்


பொள்ளாச்சியில் பிரதமர் மோடியின், 71வது பிறந்த நாளை முன்னிட்டு, பா.ஜ., மாவட்ட இளைஞரணி சார்பில் ரத்ததானம் செய்யப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., இளைஞரணி சார்பாக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் மோகன்ராஜா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வசந்தராஜன், பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தனர். இதில், 20 பேர் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட, ஒன்றிய, இளைஞரணி நிர்வாகிகள், பல்வேறு அணியினர் பங்கேற்றனர்.


மருத்துவ முகாமில் 170 பேர் பங்கேற்பு


கோவை பி.எஸ்.ஜி.,மருத்துவமனை, ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் மற்றும் அக்ரோ கிரீன் காயர்ஸ் நிறுவனம் சார்பில், ஜக்கார்பாளையத்தில் இலவச சிறப்பு பொது மருத்துவமுகாம் நடந்தது.எம்.என்.எம்., உயர்நிலை பள்ளி வளாகத்தில் நடந்த முகாமில், மகளிர், குழந்தைகள், நுரையீரல் நலம், எலும்பு- மூட்டு மாற்று, தோல் சிகிச்சை, அழகு நலம், குடல் அறுவை, யோகா மற்றும் இயற்கை நல சிறப்பு மருத்துவ பிரிவுகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


முன்னதாக, பள்ளி தலைமையாசிரியர் முருகநாதன் வரவேற்றார். பள்ளி தாளாளர் கல்யாணசாமி முன்னிலை வகித்தார். அக்ரோ கிரீன் காயர்ஸ் நிறுவன உரிமையாளர் விஜயகுமார் முகாமை துவக்கி வைத்தார். முகாமில் பங்கேற்ற, 170 பேருக்கு, 13 டாக்டர்கள் சிகிச்சையளித்தனர். இருவர் அவசர சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.


கடை வியாபாரிகள் சங்கம் உதயம்


வால்பாறை நகராட்சி கடை வியாபாரிகள் நல சங்க ஒருங்கிணைப்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நகராட்சி கடைகள் வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி, துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுப்பது, என, தீர்மானிக்கப்பட்டது.மேலும், வால்பாறை நகராட்சி கடை வியாபாரிகள் நல சங்க தலைவராக சிவா, செயலாளராக பொன்காமராஜ், பொருளாளராக விஜயன் மற்றும் கவுரவ தலைவர்களாக, 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.


ஊட்டச்சத்து மாத விழா மடத்துக்குளம் பகுதி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் இணைந்து, ஊட்டச்சத்து உணவு மற்றும் அதன் பயன்கள் குறித்து விழிப்புணர்வு மற்றும் ஊட்டச்சத்து கண்காட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரன் மற்றும் போஷன் மா திட்டத்தின் பணியாளர்கள் பங்கேற்றனர்.இந்தக்கண்காட்சியில், உடலுக்கு சத்துக்களை வழங்கும் காய்கறிகள், பழங்கள், முட்டை உள்ளிட்டவை பல வகையாக பார்வையாளர்களை கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டன. தொடர்ந்து பணியாளர் பங்கேற்ற கூட்டத்தில் விழிப்புணர்வு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.


துார்வாரும் பணிகள் ஆய்வு


உடுமலை நகராட்சி பகுதியில், தங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம், பாலாஜிநகர் ராஜவாய்க்கால், யு.கே.சி.நகர் ஓடை, நாராயணன் காலனி ஓடைகள் உள்ளன. இவற்றில் துார்வாரி சுத்தம் செய்யும் பணிகள் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, உடுமலை நகராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 6 கி.மீ., நீளமுள்ள ஓடைகள் துார்வாரப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.இதனை திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, ஆய்வு செய்தார். நகர் நல அலுவலர் கவுரி சரவணன், சிவில் சப்ளை தாசில்தார் தயானந்தன், சுகாதார ஆய்வாளர்கள் செல்வம், ராஜ்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


ரோட்டில் ஜல்லிக்கற்களால் விபத்து


உடுமலை அரசு மருத்துவமனை அமைந்துள்ள வ.உ.சி., வீதியிலிருந்து சர்தார் வீதி வழியாக, ராஜேந்திரா ரோடு உட்பட பகுதிகளுக்கு அதிகளவு வாகனங்கள் செல்கின்றன.இந்நிலையில், இந்த ரோடு சந்திப்பு பகுதியில், தார்ரோடு அமைக்கும் பணிக்காக சிறிய ஜல்லிக்கற்கள், ரோட்டோரத்தில் கொட்டப்பட்டது.



பணிகள் துவக்கப்படாத நிலையில், ஜல்லி முழுவதும், ரோட்டில் பரவியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், சர்தார் வீதியில், திரும்பும் போது, நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.இந்த ரோடு வழியாகவே, அரசு மருத்துவமனைக்கு, ஆம்புலன்ஸ் உட்பட வாகனங்கள் செல்கின்றன. எனவே, ரோட்டில் கிடக்கும் ஜல்லிக்கற்களை அப்புறப்படுத்த, நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ரோட்டோரத்தில் கழிவுகளால் சீர்கேடு


உடுமலை-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், நகரையொட்டி, பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட பல குடியிருப்புகள் அமைந்துள்ளன.இக்குடியிருப்புகளிலிருந்து, குப்பையை மாநில நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும், கொட்டுகின்றனர். சில நேரங்களில், குப்பைக்கு தீ வைத்து எரிக்கும் சம்பவங்களும் நடக்கிறது.பிளாஸ்டிக் உட்பட பல்வேறு கழிவுகளையும் ரோட்டோரத்தில், கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.சுகாதார சீர்கேட்டை தடுக்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோட்டோரத்தில், எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். ஊராட்சி நிர்வாகத்தினர் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X