பிரதான ரோட்டில் 'குடி'மகன்கள் அட்டகாசம்: மக்களை பதம் பார்க்கும் காலி பாட்டில்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2021
08:13

உடுமலை;உடுமலை நகரில், பள்ளி மற்றும் சந்தை அருகே செயல்பட்டு வரும் 'டாஸ்மாக்' மதுக்கடையால், சமூகவிரோத செயல்கள் அதிகரித்து, பிரதான ரோட்டில், மக்கள் நடமாடவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது.உடுமலை ராஜேந்திரா ரோட்டில், தினசரி சந்தை, கேந்திரியா வித்யாலயா பள்ளி, நகராட்சி நடுநிலைப்பள்ளி, ரயில்வே ஸ்டேஷன் மற்றும் வரிசையாக கடைகள் அமைந்துள்ளன.



மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த ரோட்டில், நால்ரோடு சந்திப்பு அருகே, 'டாஸ்மாக்' மதுக்கடை செயல்பட்டு வருகிறது.இந்த கடைக்கு வரும் 'குடி'மகன்கள், அட்டகாசத்தால், முக்கிய ரோட்டில், மக்கள் நடமாடவே அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மதுக்கடையில் 'பார்' வசதியில்லாத நிலையில், அருகிலுள்ள பள்ளி சுற்றுச்சுவர், அண்ணா பூங்கா ஆகிய இடங்களை திறந்தவெளி பாராக மாற்றிக்கொள்கின்றனர்.இதனால், மாலை நேரங்களில், சர்தார் வீதி உட்பட அருகிலுள்ள வீதிகளில், பெண்கள் நடந்து செல்ல முடிவதில்லை.மேலும், பள்ளி அருகிலும், கடைகள் முன், குடித்து விட்டு காலி பாட்டில்களை வீசி எறிந்து அட்டகாசம் செய்வது அதிகரித்துள்ளது.ரோட்டோரத்தில், உடைக்கப்படும் பாட்டில் துண்டுகள், அவ்வழியாக ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பாதசாரிகளை பதம் பார்க்கிறது.



மதுக்கடைக்கு, அருகிலும், எதிரிலும், உள்ள பிற கடையினர், நாள்தோறும் காலி மதுபாட்டில்களை அப்புறப்படுத்திவிட்டே, கடையை திறக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மேலும், குடிபோதையில், இரவு நேரங்களில், குடிமகன்கள் பல்வேறு சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்; விபத்துகளும் அப்பகுதியில், அதிகரித்து வருகிறது.நகரின் பிரதான ரோட்டில் அமைந்துள்ள, 'டாஸ்மாக்' மதுக்கடையை இடம் மாற்ற வேண்டும் என மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.


அதே போல், போக்குவரத்து மிகுந்த ரோட்டில், மது குடிப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை.பெரிய அசாம்பாவிதங்கள் ஏற்படும் முன், ராஜேந்திரா ரோட்டிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை இடம் மாற்ற வேண்டும். உடனடியாக மாலை, இரவு நேரங்களில், கண்காணிப்புக்காக அப்பகுதியில், போலீசாரை நியமித்து, பயணிகள், ராஜேந்திரா ரோட்டை அச்சமின்றி கடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X