உலக சுற்றுலா தினம் கொண்டாட்டம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
உலக சுற்றுலா தினம் கொண்டாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 செப்
2021
08:16

உடுமலை:உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சைக்கிள் பயணம், உடுமலை தேஜஸ் மஹாலில் துவங்கி, கெடிமேடு, ஊஞ்சவேலாம்பட்டி, பொள்ளாச்சி, நா.மூ.சுங்கம், அங்கலக்குறிச்சி, ஆழியார் அணை சென்றது.பின்னர், தேவனுார்புதுார், எரிசினம்பட்டி வழியாக திருமூர்த்தி அணையும், பின்னர், தளி, குறிஞ்சிக்கோட்டை வழியாக அமராவதி அணை சென்று, உடுமலைக்கு, 150 கி.மீ., துாரம் சைக்கிள் பேரணி நடந்தது.இதில், 50-க்கும் மேற்பட்ட சைக்கிள் பயண வீரர்கள் பங்கேற்றனர். பங்கேற்றவர்களுக்கு, பாராட்டுசான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்தகுமார், டி.எஸ்.பி., தேன்மொழிவேல், சுற்றுலா வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள், நாகராஜ் பாபு, ஜவஹர், சண்முகம், பிரசாந்த், பொன்ராஜ், விஜயராஜேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X