வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மறியல்: அணி திரண்ட எதிர்க்கட்சிகளால் பரபரப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2021
08:20

பொள்ளாச்சி, உடுமலையில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு எதிராகவும், பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவும் இருப்பதாக கூறி, எதிர் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர், பொள்ளாச்சியில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.



பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், காலை, 10:30 மணிக்கு தொழிற்சங்கத்தினர் மற்றும் தி.மு.க., -- காங்., -- கம்யூ., உள்ளிட்ட கட்சியினர், மத்திய அரசுக்கு எதிராகவும், வேளாண் சட்டத்துக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். அங்கிருந்து நகர்ந்து, சப் - கலெக்டர் அலுவலகம் முன், மறியலில் ஈடுபட்டனர்.போராட்டத்தில், எல்.பி.எப்., - ஐ.என்.டி.யு.சி., - சி.ஐ.டி.யு., உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், விவசாய அணி மாநில துணைத்தலைவர் தமிழ்மணி, நகர பொறுப்பாளர் பழனிசாமி, காங்., மாநில துணைத்தலைவர்கள் கந்தசாமி, செந்தில்குமார், மாவட்ட தலைவர் பகவதி, கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.



சாலை மறியல் செய்தவுடன், கைது செய்யும் எண்ணம் இல்லை; அமைதியாக கலைந்து செல்லுங்கள் என்று டி.எஸ்.பி., தமிழ்மணி தலைமையிலான போலீசார் அறிவுறுத்தினர். அதையும் மீறி, கம்யூனிஸ்ட் கட்சியினர், தொழிற்சங்கத்தினரில் ஒரு பகுதியினர், ரோட்டில் அமர்ந்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அவர்களில் நான்கு பெண்கள் உள்ளிட்ட, 99 பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர்.


உடுமலை


உடுமலை தலைமை தபால் நிலையம் முன், மறியல் போராட்டம் நடந்தது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தாலுகா தலைவர் பாலதண்டபாணி தலைமை வகித்தார். மா.கம்யூ., கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதுசூதனன், ஒன்றிய செயலாளர்கள் கனகராஜ், சசிகலா, தண்டபாணி, எல்.பி.எப்., சங்கம் பாலநாகமாணிக்கம், தி.மு.க., நகரச்செயலாளர் மத்தீன், காங்., மாவட்ட கவுன்சிலர் ஜனார்த்தனன், எம்.எல்.எப்., ஈஸ்வரன், இ.கம்யூ., ரணதேவ் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போலீசார் அவர்களை கைது செய்து, தனியார் மண்டபத்தில் காவலில் வைத்தனர்.


ஐக்கிய கம்யூ.,சார்பில், ரயில்வே ஸ்டேஷன் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மூர்த்தி, அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட, நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.மடத்துக்குளம்மடத்துக்குளம் நால் ரோட்டில், மா.கம்யூ., கட்சியினர், தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாகச்சென்று பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் பகுதியில் அமர்ந்தனர்.



தாலுகா செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில், சாலை மறியலில் ஈடுபட்ட, 135 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மறியலுக்கு ரயில் இல்லை!மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்த திட்டமிடட்டவர்கள், முதலில் ரயில் மறியல் போராட்டமாகஅறிவித்தனர். போராட்டத்துக்கு வந்த போதும், கையில் 'ரயில் மறியல் போராட்டம்' என்ற பதாகையை ஏந்தி வந்தனர்.ஆனால், பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, இரண்டு ரயில்கள் மட்டுமே இயங்குவதால், போராட்டம் நடத்தும்நேரத்தில்,மறிக்க கூட ரயில் இல்லாத சூழல்ஏற்பட்டது. அதனால், கடைசி நேரத்தில் சாலை மறியல் போராட்டமாக மாற்றப்பட்டது.- நிருபர் குழு -

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X